News October 23, 2024
நிலத் தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது

தேனி வருசநாடு அருகே சீலமுத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு மலைச்சாமி, அய்யனார் என்ற இரு தம்பிகள் உள்ளனர். நிலப்பிரச்சனையில் அண்ணன் தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் அண்ணனை தாக்கியதில் உயிரிழந்தார். கொலை செய்த தம்பி அய்யனாரை வருசநாடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
தேனி: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
தேனி: மரக்கிளைகளை வெட்ட முயன்றவர் பலி

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (55). இவர் ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். தோட்டத்தில் உள்ள மரக்கிளைகளை அறுக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முனியாண்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (ஜன.24) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு.
News January 25, 2026
தேனி: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


