News November 17, 2024

நிலத்தை பதிவு செய்யாவிட்டால் அபராதம்

image

சென்னை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும். சென்னை மாநகராட்சி பகுதியில் தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News September 10, 2025

சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

image

சென்னை மாநகராட்சியின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (செப்.10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மொத்தம் 11 வார்டுகளில் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் முகாம்களில்பங்கேற்று பயன்பெறலாம்.

News September 10, 2025

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா

image

கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு 2025’ செப்டம்பர் 22, முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்பட உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி 22-ஆம் தேதி விழாவை தொடங்கி வைக்கவுள்ளார். தினமும் மாலை 4:00-5:00 மணி வழிபாடு, 5:00-6:00 மணி கலாச்சார நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் பங்கேற்க https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ மூலம் 20.09.2025க்குள் முன்பதிவு செய்யலாம்.

News September 9, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!