News March 23, 2024
நிறுவனர் ராமதாஸுடன் பாமக வேட்பாளர் சந்திப்பு

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சௌமியா அன்புமணி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் அரசாங்கம் உடன் இருந்தனர்.
Similar News
News April 10, 2025
இலவச எலும்பு பரிசோதனை முகாம்

வேதா பிசியோதெரபி கிளினிக் சார்பில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி அன்று இலவச பிசியோதெரபி மற்றும் எலும்பு பரிசோதனை முகாம் தர்மபுரியில் உள்ள அம்மா கண்ணு மருத்துவமனை அருகில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மூட்டின் செயல்பாட்டினை கண்டறிதல் மற்றும் மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஆகியவைக்கான பரிசோதனை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் செய்யப்படுகிறது.
News April 9, 2025
பிஜேபி சேலம் மாநாட்டுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழக பாஜக மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் 19ஆம் தேதி ஓமலூரில் நடைபெறவிருக்கும் சேலம் பெருங்கோட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு தர்மபுரி மாவட்ட மற்றும் மண்டல அளவில் பொறுப்பாளர்களை இன்று தர்மபுரி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சரவணன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News April 9, 2025
தர்மபுரி தொங்கும் தூண் பற்றி தெரியுமா?

தர்மபுரியில் மிகவும் பிரிசித்தி பெற்ற கல்யாண காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அழகிய சிற்பங்களுடன் காணப்படும், தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால் மறுப்பக்கம் வந்துவிடும். 2000 கிலோ எடை கொண்ட இந்த தூண் அந்தரத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொங்கும் தூண் என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு சோறு பதம் ஆகும். *இது பற்றி தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்*