News April 16, 2024
நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 21, 2025
ராணிப்பேட்டையில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்-20 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News October 20, 2025
ராணிப்பேட்டை: 10th பாஸ் போதும்… கைநிறைய சம்பளம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு<