News April 12, 2025
நிறுவனங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் 02.07.2024 தேதிக்கு பின்னர் புதிதாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 10 அல்லது 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பதிவிற்கான விண்ணப்பத்தினை தொழிலாளர் நலத்துறையின் இணையவழி தளமான https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 13, 2025
சிவகங்கையில் முகத்தை சிதைத்துக் கொலை

சிவகங்கை இளையான்குடி வேலடிமடம் பஸ் ஸ்டாப்பில் உறங்கி கொண்டிருந்த மகேஸ் என்பவர் முகம் சிதை்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடன் இருந்த நவீன் என்ற இளைஞர் பலத்த வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி தப்பி ஒடி விட்டனர்.கொலை செய்யப்பட்ட மகேஷ் திருவாரூரைச் சேர்ந்த நெல் அருவடை எந்திரத்தின் உரிமையாளர் ஆவார். போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
News April 13, 2025
சிவகங்கை:குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

காரைக்குடியை சேர்ந்தவர் லிங்கம். அவரது மனைவி பானுமதி மகள் விஷாலினி 9 சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சிறுமியை வளர்ப்பதில் சிரமம் என நினைத்த தம்பதியினர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு, மகளுக்கும் கொடுத்தனர்.பின் உறவினருக்கு விஷம் அருந்தியதை தெரிவித்தனர். உறவினர்கள், மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானார். லிங்கம், அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News April 12, 2025
இரண்டு கைகளுடன் காணப்படும் பிள்ளையார்

உலகில் இரண்டு கைகளுடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் அதிகமான பிற்கால அணிகலன்களுடன் காணப்படுகிறது. சிற்பத்தை வடிவமைத்த காலம் ஏறக்குறைய கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என வரலாற்று குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது. Share It.