News April 13, 2025
நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் எழுத உத்தரவு

செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில், சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என எல்லாவற்றிக்கும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் எனவும் தமிழில் பெயர் பலகைகள் மே மாதம் 15ம் தேதிக்குள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News April 15, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் 154 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கு, 10 வகுப்பு பாஸ்/ஃபெயில் ஆன 18-40 வயதுடைய பெண்கள் https://chengalpattu.nic.in/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, இந்த மாதம் 17- 29-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்தவர்களுக்கு பகிரவும்
News April 15, 2025
டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.