News March 21, 2025
நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும்

புதுச்சேரி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
Similar News
News March 27, 2025
புதுவையில் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் தெரியுமா?

புதுவை மதகடிப்பட்டில் குண்டாங்குழி எனும் குளக்கரையில் அமைந்ததுள்ளதால் இங்குள்ள மூலவர் குண்டாங்குழி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி. 985-இலிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. SHARE செய்யவும்
News March 27, 2025
புதுவை ஆரோவில்லில் ஐஐடி கேம்பஸ்

புதுவை ஆரோவில்லில் ஐஐடி மெட்ராஸ் தனது 4வது கேம்பஸை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாக அதன் இயக்குநர் காமக்கோடி அறிவித்துள்ளார். ஆரோவில்லில் 20 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பூஜ்ஜிய-உமிழ்வு சோதனை மையம் அமைக்கப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
News March 27, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ-க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், நாக தியாகராஜன், நேரு(எ)குப்புசாமி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானம் அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் இன்று 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.