News January 11, 2026
நிர்வாக தோல்வியை மறைக்கும் திமுக அரசு: அண்ணாமலை

அமைதி வழியில் போராடும் இடைநிலை ஆசியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை காட்டுவதாக அண்ணாமலை சாடியுள்ளார். தனது X பதிவில் அவர், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத CM ஸ்டாலின், நிர்வாக தோல்வியை மறைக்க ஆசியர்கள் மீது போலீஸை ஏவுவதாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, கைதான ஆசிரியர் சங்கத்தின் 7 நிர்வாகிகளை விடுவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 31, 2026
சினிமாவில் இருந்து விலகுகிறேன்.. விஜய் அறிவிப்பு

தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்வை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல என்று விஜய் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜன நாயகனோடு சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் அளிப்பதாக திரைத்துறையினர் பலரும் கவலை தெரிவித்திருந்தனர். விஜய்யின் சினிமா பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன?
News January 31, 2026
TET முடிவுகள் வெளியானது.. உடனே செக் பண்ணுங்க

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) முடிவுகள் இணையளத்தில் வெளியாகியுள்ளது. 4,25,000 பேர் எழுதிய தேர்வு முடிவுகளை, <
News January 31, 2026
மோடிக்கு எதிராக விஜய் வீடியோ: K.C.பழனிசாமி

தவெகவினருக்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை என K.C.பழனிசாமி கூறியுள்ளார். CBI வைத்து தவெகவுக்கு டெல்லி அழுத்துகிறதா என கேட்டதற்கு பதிலளித்த அவர், திமுகவுக்கு எதிராக ‘CM சார்..’ என பேசிய விஜய், மோடிக்கு அப்படியொரு வீடியோ வெளியிட்டிருந்தால் இந்திய அளவில் பிரபலமாகியிருப்பார். மேலும், அனைவரையும் எதிர்த்து நிற்க தயாராக இருக்க வேண்டும், பயப்பட்டால் அரசியலுக்கே வரக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.


