News January 23, 2025
நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்: அரசு டெண்டர்

ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு சூரியூர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஷ் விழா குழுவினரிடம் வழங்கினார். இந்த ஸ்டேடியம் அமைப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.
Similar News
News November 9, 2025
திருச்சி: 12.89 லட்சம் கணக்கீட்டு படிவம் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (நவ.8) மாலை வரை 12 லட்சத்து 89 ஆயிரத்து 649 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
திருச்சி: 8-ஆம் வகுப்பு போதும், அரசு வேலை ரெடி!

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள <
News November 8, 2025
திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <


