News October 19, 2024
நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்தியா 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் 150, பண்ட் 99, கோலி 70, ரோஹித் 52 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்சில் இந்தியா 46, நியூசி., 402 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சில் இந்தியா அதிரடி காட்ட, நியூசி.,க்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மீதம் உள்ள நிலையில், எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News July 5, 2025
இந்திய சந்தைகளை ஏமாற்றி ₹36,500 கோடி வருவாய்?

சர்வதேச அளவில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜேன் ஸ்ட்ரீட் (Jane Street) இந்திய சந்தைகளை ஏமாற்றி ₹36,500 கோடி வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த செபி, இந்திய பங்குச் சந்தையில் இருந்து Jane & அது சார்ந்த நிறுவனங்களை தடை செய்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக ஈட்டிய ₹4,843 கோடியை திரும்பச் செலுத்தவும் செபி உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஜேன் ஸ்ட்ரீட் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது
News July 5, 2025
ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்.. கண்ணீர் அஞ்சலி

பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு இதே நாளில் தான், ரவுடி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி போட்ட இச்சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. எந்த பக்கம் பார்த்தாலும், இந்த கொலை குறித்துதான் பேச்சு. இந்த விவகாரம் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலமாண்டு நினைவு நாளையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
News July 5, 2025
20 வருடங்களுக்கு பிறகு இணையும் தாக்கரே பிரதர்ஸ்!

தாக்கரே சகோதரர்களால் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டால் 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த இருவரும் மராத்தி மொழி பிரச்னைக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். மும்மொழி திட்டத்திற்கு எதிராக இன்று மும்பை NSCI-ல் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் மராத்தி ஆர்வலர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.