News March 27, 2025
நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும்

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச்.29 சனிக்கிழமையாக அமைவதோடு மார்ச்.30,31 அரசு விடுமுறை என்பதால் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி நெல்லையில் மார்ச்.29 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 30, 2025
நெல்லை மாநகரில் ஒருவர் குண்டாசில் கைது

திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வானமாமலை (43). இவர் பண பிரச்சனை காரணமாக பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தி வந்தார். இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் பிரசன்ன குமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவையடுத்து வானமாமலை இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News October 29, 2025
நெல்லை மாணவியை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

பஹ்ரைனில் நடைபெற்ற 3-வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற நெல்லையை சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். மேலும் சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள எட்வினா ஜேசனைபாராட்டி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்தார்.
News October 29, 2025
நெல்லை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


