News April 2, 2025
நிம்மதியின்றி தவித்த அரசு அலுவலர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலையைச் சேர்ந்தவர் கதிர்நிறைசெல்வன் (49). தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2 தினங்களாக நிம்மதியில்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா சண்முகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டனர்.
Similar News
News April 10, 2026
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 10, 2026
சங்கராபுரம்: திருமாவை சந்தித்த திமுக வேட்பாளர்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று(ஏப்.9) இரவு தனது தேர்தல் பரப்புரையை நிறைவு செய்த பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதயசூரியனை நேரில் சந்தித்து வாழ்ந்து பெற்றார்.
News April 10, 2026
சின்னசேலம் அருகே துடித்துடித்து பலி!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த பி.ஏ.அம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி(64). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நிலத்தில் இருந்த காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்தி அதனை தீ வைத்து கொளுத்தும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.


