News January 19, 2026

நிபா வைரஸ்: தமிழக அரசு எச்சரிக்கை

image

மேற்கு வங்கத்தில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக தமிழகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 28, 2026

கோவாவில் சிறுவர்களுக்கு SM-ஐ தடை செய்ய பரிசீலனை

image

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்க கோவா அரசு பரிசீலனை செய்து வருகிறது. SM பயன்பாட்டால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதாக உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவாவிலும் சாத்தியம் இருந்தால் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் கூறியுள்ளார்.

News January 28, 2026

ராசி பலன்கள் (28.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 28, 2026

BREAKING: காங்., உடன் திமுக கூட்டணி பேசவில்லை

image

காங்., கட்சியுடன் திமுக, கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று தமிழக காங்., பொறுப்பாளர் ஷோடங்கர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். டிச.3-ல் ஸ்டாலினை சந்தித்து, டிச.13-க்குள் கூட்டணி முடிவை உறுதி செய்யக் கோரினோம். திமுகவின் பதிலுக்காக 2 மாதங்கள் காத்திருந்தும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற அவர், திமுக தரப்பில் இருந்து ஏன் இவ்வளவு தாமதம் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!