News April 25, 2025
நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி 18 பேர் படுகாயம்

மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி, இன்று தனது குடும்பத்தினருடன், வேனில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு, மதுரை திரும்பி கொண்டு இருந்தார். மதுரை பைபாஸ் சாலையில், இவர்கள் சென்ற வேன் திடீரென்று நிலைத்தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் 4 குழந்தைகள் 8 பெண்கள் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
விஷம் அருந்திய பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

கயத்தாறு அருகே உள்ள திருமங்கல குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது 15 வயது மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என மனமுடைந்த சிறுமி கடந்த 18ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 26, 2025
துர்நாற்றம் வீசும் கடல் பாசிகள்

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா அருகே உள்ள கடல் பகுதியில் கடந்த ஒருவார காலமாக கடலின் ஆழப் பகுதியில் வாழும் கடல் பாசிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த கடற்பாசிகள் கரை ஓரத்தில் குவியல் குவியலாக கிடக்கின்றன. இதனை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
News April 26, 2025
திருச்செந்தூர் கோயிலில் முதியோர்களுக்கு இருக்கை வசதி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய பொது வரிசை, நூறு ரூபாய் கட்டண வரிசை மற்றும் முதியோர்களுக்கான வரிசை என்று மூன்று வரிசைகள் உள்ளன. இவைகளில் விழா காலங்களில் முதியோர்கள் வரிசையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் முதியோர்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து முதியோர்கள் வரிசையில் கோவில் நிர்வாகம் தற்போது இருக்கைகளை அமைத்துள்ளது.