News March 24, 2025
நினைத்தது நிறைவேறும் யோகநரசிம்மர் ஆலயம்

தஞ்சாவூர், திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கன்பேட்டையில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் வேண்டுதல் நிறைவேற கொப்பரை தேங்காயை கட்டிவிட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. நிறைவேறியதும் பக்தர்கள் அந்தத் தேங்காயை கடவுளுக்கு உடைத்து அர்ச்சனை செய்து வழிபடுவர். ஒருமுறை சென்று வாருங்கள் மாற்றம் நிகழும்…பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News April 4, 2025
பட்டுக்கோட்டையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குரூப்-4 தேர்வு ஜூலையில் நடைபெற உள்ளது. இதனால் பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பட்டுக்கோட்டை அறிவுசார் மையத்தில் வரும் 9ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார். இதை போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு SHARE செய்து பயன்பெற உதவுங்கள்…
News April 4, 2025
தஞ்சை மாவட்டத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைவர்கள் <
News April 4, 2025
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் நேர்காணல்

மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் பல அலுவலர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் ஏப்ரல் 23ஆம் தேதி தஞ்சை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், 24ஆம் தேதி பாபநாசத்திலும், 25ஆம் தேதி மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திலும் நடைபெற உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பியவர்களாகவும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.