News January 11, 2025

நிதி நெருக்கடியை சமாளிக்க கலால் வரி உயர்வு

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிம கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Similar News

News February 12, 2026

மாற்றுத்திறனாளிகள் இலவச சுற்றுலா செல்ல அழைப்பு

image

புதுச்சேரி அரசு, சமூக நலத்துறை இயக்குனர் ராகினி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி அரசு, சமூகநலத்துறை மாற்றுத்திறனாளிகள் மனமகிழ்விற்காக ஆண்டுதோறும் இலவச சுற்றுலா செல்லும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கான நான்கு நாட்கள் இலவச சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வை, காது மற்றும் உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News February 12, 2026

புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News February 12, 2026

உதயஞ்சாலை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

image

புதுவை ஒதியஞ்சாலை உதவிஆய்வாளர் ஆனந்தகுமார்
மற்றும் போலீசார் ரோந்து
பணியில் இருந்தனர்,
அப்போது மறைமலையடிகள்
சாலை, மற்றும் கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில் ஒரு வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களை
மிரட்டிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவரை
பிடித்து விசாரித்ததில்
முகேஷ் (23) என்பது
தெரியவந்தது. இதனையடுத்து
போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!