News December 17, 2025
நிதிஷ் ஹிஜாப்பை இழுத்தது சின்ன விஷயம்: உ.பி. அமைச்சர்

<<18575369>>ஹிஜாப் விவகாரத்தில்<<>> பிஹார் CM நிதிஷ்குமாருக்கு ஆதரவாக உ.பி., அமைச்சர் சஞ்சய் நிஷாத் கருத்து தெரிவித்துள்ளார். சரியான நபருக்குத்தான் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்யவே ஹிஜாப்பை இழுத்துப் பார்த்தார். இந்த சின்ன விஷயத்தை பெரிதுபடுத்துகின்றனர். ஒருவேளை நிதிஷ் வேறு எங்கேயாவது பிடித்திருந்தால் எப்படி ரியாக்ட் செய்திருப்பார்கள் என நிஷாத் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
Similar News
News December 19, 2025
வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

வேலூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News December 19, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி!

NDA கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை EPS – அன்புமணி இருவரும் இணைந்து வெளியிட உள்ளனராம். கூட்டணி உறுதியானதன் எதிரொலியாகவே மயிலம் பாமக MLA-வாக உள்ள சிவக்குமார், வரும் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் CV சண்முகம் களமிறங்க உள்ளார்.
News December 19, 2025
கோலியின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக்?

IND, SA இடையே இன்று 5-வது டி-20 போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதில் அபிஷேக் சர்மா, கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ஒரு ஆண்டிற்குள் T20-ல் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை கோலியின் வசம் உள்ளது. அவர் 2016-ல் 1,614 ரன்கள் (IND, RCB) அடித்துள்ளார். நடப்பாண்டில் 1,568 ரன்கள் எடுத்துள்ள அபிஷேக் (IND, PUN, SRH) கூடுதலாக 47 ரன்கள் எடுத்தால் அச்சாதனை தகர்க்கப்படும்.


