News November 23, 2025
நிதியமைச்சரின் பெயரில் ₹1.47 கோடி மோசடி

SM-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ₹1.47 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ₹21,000 முதலீடு செய்தால் ₹60,000 லாபம் கிடைக்கும் என்று போலி பங்குச் சந்தை திட்டங்களை சைபர் குற்றவாளிகள் உருவாக்கியுள்ளனர். இதை நம்பி மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர், தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் அவர்களிடம் இழந்துள்ளார். ஆசைவார்த்தையை நம்பி ஏமாறாதீங்க மக்களே!
Similar News
News February 2, 2026
சர்ச்சையில் சிக்கிய மோடி… அவசர விவாதம் கேட்கும் காங்.,

அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் <<19017677>>மோடியின்<<>> பெயர் இடம்பெற்றது சர்ச்சையானது. இந்த தகவல்களை தவறானது என மத்திய அரசு ஏற்கெனவே மறுப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் MP மாணிக்கம் தாக்கூர் கொடுத்துள்ளார்.
News February 2, 2026
FLASH: முன்னாள் அமைச்சர் காலமானார்

ராஜஸ்தான் மாநில பாஜக முக்கிய தலைவரும், EX அமைச்சருமான ஹேம் சிங் பதானா(55) காலமானார். கேன்சர் பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. குர்ஜார் சமூகத்தின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஹேம் சிங் பதானா, வசுந்தரா ராஜேவின் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 2, 2026
தமிழக அரசு என் படத்த கண்டுக்கல: சேரன் வேதனை!

‘திருமணம்’ படத்திற்கு தமிழக அரசின் விருது கிடைக்காததை இயக்குநர் சேரன் விமர்சித்துள்ளார். தேர்வு குழுவினரால் தனது படம் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நேர்மையான முறையில் பாரபட்சமின்றி விருதுகள் சென்றைடைய வேண்டும் எனவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


