News March 15, 2025

நிதிநிலை அறிக்கை குறித்து விசிக தலைவர் பேட்டி

image

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

Similar News

News March 3, 2026

விழுப்புரத்தில் கார் மோதி பரிதாப பலி!

image

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (73); இவர், நேற்று முன்தினம் பண்ருட்டி-மடப்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற கார், கேசவன் மீது அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கேசவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 3, 2026

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டம் காவல்துறை சார்பில் நேற்று ( மார்ச் 02) இரவு 10 மணி முதல் (மார்ச் 03) காலை 6:00 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி,கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

News March 2, 2026

விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!