News December 31, 2025
நிஜமாகும் சினிமா வன்முறை: சந்தோஷ் நாராயணன்

சென்னையில் போதைப்பொருள் கும்பல்களின் வன்முறை அதிகரித்துள்ளதாக சந்தோஷ் நாராயணன் வேதனை தெரிவித்துள்ளார். தனது ஸ்டுடியோ தளத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதையும், பிடிபட்ட குற்றவாளி போதையில், போலீஸ் அடித்தபோது கூட சிரித்ததையும், X பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். சாதி, அரசியல் பின்னணியால் இக்கும்பல்கள் துணிச்சலுடன் செயல்படுவதாகவும், சினிமா வன்முறை நிஜமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 3, 2026
பார்வை இல்லாதவர்களுக்கும் இனி பார்வை கிடைக்கும்!

பிறவியிலேயே பார்வை இழந்த, வாய் பேசமுடியாதவர்களுக்கு நியூராலிங்க் நிறுவனர் எலான் மஸ்க் புத்தாண்டு நற்செய்தி தெரிவித்துள்ளார். பார்வை மற்றும் குரலை மீட்டு தருவதற்கான சாதனங்களுக்கு FDA அங்கீகாரம் கிடைத்துள்ளது. மூளையில் சிப் பொருத்தப்பட்டு, பார்வை நரம்புகளின் வேலை செய்யப்படும். அதேபோல், மூளை நினைப்பதை கம்பியூட்டர் பேசும். இதற்கான பரிசோதனை உலகம் முழுவதும் தொடங்கி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
பொங்கல் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. *போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்க மருந்துகள், எரிச்சலூட்டும் மருந்துகள் கொடுக்கக் கூடாது. *காயமடைந்தவர்களுக்கு முறையாக முதலுதவி அளிக்கப்பட வேண்டும். *போட்டி நடைபெறும் இடத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். SHARE IT.
News January 3, 2026
தவெகவில் இணைந்த அதிமுக முக்கிய தலைவர்கள் (PHOTOS)

பொங்கலுக்குள் அதிமுகவிலிருந்து பல தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என KAS கூறிய நிலையில், அடுத்தடுத்து பலர் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சேலத்திலிருந்து <<18692753>>பல்பாக்கி கிருஷ்ணன்<<>>, கரூரிலிருந்து மரியமுல் ஆசியா, சென்னையிலிருந்து <<18746502>>JCD பிரபாகர்<<>> என அதிமுக EX MLA-க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர். இதனால், அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை சரிகட்டும் முயற்சியில் EPS களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


