News May 4, 2024
நிச்சயம் மீண்டும் நடிப்பேன்-எம். பி உறுதி!

மதுரை விமான நிலையத்தில் நேற்று எம் பி விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் மோடியின் பேச்சுகளும், நிலைப்பாடுகளும் மாறி வருகிறது. 400 இடங்கள் என்று சொல்லிய நிலையில் தற்போது ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக உள்ளதால் மக்களிடம் வெறுப்பு, பிரிவினையை கொண்டு வர அவர் இப்படி பேசுவதாக தெரிவித்தார். மேலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என தெரிவித்தார்
Similar News
News September 13, 2025
மதுரை: பிரபல தொழிலதிபர்கள் இடங்களில் ரெய்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர்கள் மணி (எ)முத்தையா மற்றும் மருது பாண்டியனுக்கு சொந்தமான எம்.வி.எம் நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இவர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன் ‘இரிடியம்’ குறித்த பண மோசடி புகார் எழுந்தது. அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இங்கு சோதனையை நடத்தினர்.
News September 13, 2025
மதுரையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளை

வாடிப்பட்டி பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருடிய சமயநல்லுார் ரூபன்31, சேகர் 22, வடகாடுபட்டி தமிழழகன்22 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மதுஅருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு கூகுள் மேப்பில் கோவில்களை கண்டறிந்து திருடியது அம்பலமானது.
News September 13, 2025
ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்ற மூவர் மதுரையில் சரண்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளருமான ம.க.ஸ்டாலினை வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை மதுரை மாவட்ட 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். சரணடைந்த விஜய் 27, ஆகாஷ் 30, மகாலிங்கம் 26 ஆகிய 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.