News November 18, 2024

நா.த.க மாவட்டச் செயலாளர் பதவி விலகல்

image

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதாக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகி வருவதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News November 13, 2025

மேச்சேரி அருகே சோகம் காவலர் பலி!

image

சேலம், மேச்சேரி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ ஆக பணியாற்றி வந்த தன்ராஜ். இரவு உணவு அருந்திவிட்டு சமையலறைக்கு கை கழுவச் சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளார். உறவினர்களால் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர்களால் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள்!

image

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டக்கர் ரயிலில் [22666/22665] கூடுதலாக ஒரு ஏசி LHB பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 20- ஆம் தேதி முதல் மே 19- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், கோடை விடுமுறை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.12) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!