News January 27, 2026
நாளை JEE தேர்வு.. இதை மறக்காதீங்க

பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் முதற்கட்ட தேர்வு நாளை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் செஷன் காலை 9 முதல் 12 மணி, இரண்டாவது செஷன் மதியம் 3 முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது. இதில் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை, பள்ளி ஐடி கார்டு ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.
Similar News
News February 9, 2026
கூட்டணியில் சேர தூது.. சசிகலா வைத்த டிமாண்ட்!

NDA-வில் சேர சசிகலா விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், EPS தனக்கு நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன், Ex அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என சசிகலா கேட்டாராம். இதனை கேட்ட EPS, முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தால் சீட்டு பற்றி பேசலாம் என கூறிவிட்டாராம்.
News February 9, 2026
FLASH: உப்பு விலை தலைகீழாக குறைந்தது

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் முன்கூட்டியே உப்பு உற்பத்தி செய்யும் பணி தூத்துக்குடி உப்பளங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பழைய உப்பு 1 டன் ₹3,000 வரை விற்பனையான நிலையில், தற்போது ₹1,200-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய உப்பும் 1 டன் ₹1,300-க்கே விற்கப்படுகிறதாம். தற்போது 1 கிலோ உப்பு ₹20 வரை விற்கப்படும் நிலையில் விலை குறைய வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் விலை என்ன?
News February 9, 2026
ஜப்பானின் புதிய பிரதமருக்கு PM மோடி வாழ்த்து!

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ள ஜப்பான் புதிய பிரதமர் சானே டகாயிச்சிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X பதிவில், நமது சிறப்புமிக்க உலகளாவிய கூட்டாண்மை, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தங்கள் திறமையான தலைமையின் கீழ், இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வோம் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.


