News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
கன்னியாகுமரி பேரூராட்சியில் ரூ.1.15 கோடிக்கு ஏலம்

கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15 முதல் ஜன.15 வரை சீசன் காலமாகும். இந்த 60 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனா். சீசன் காலத்தில் வருவாயை பெருக்கிக் கொள்ளும் விதமாக, தற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 62 சீசன் கடைகள் மற்றும் காா் பாா்க்கிங் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.