News August 9, 2024

நாளை விருதுநகரில் இருந்து புறப்படுகிறது

image

மதுரை கோட்டத்தில் பகல் வேலைகளில் பொறியியல் பிரிவு சார்பில் தூண்கள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குருவாயூரிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ்(16128) நாளை(ஆக.,10 ஆம் தேதி) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.

Similar News

News November 2, 2025

விருதுநகரில் நாளை முதல் வீடு தேடி வரும்

image

விருதுநகரில் வயதான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை, நாளை மறுநாள்(நவ.3,4) இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைபதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயருகிறது – எம்.எல்.ஏ

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அசோகன், தமிழக அரசின் திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயருகிறது என தெரிவித்தார்.

News November 2, 2025

ஏழாயிரம்பண்ணை: 2 பேருக்கு வலைவீச்சு

image

தாயில்பட்டி அருகே இ.எல்.ரெட்டியாபட்டியில் சுரங்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது. ஏழாயிரம்பண்ணையிலிருந்து கோவில்பட்டி நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி ஜல்லிகற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு உரிமையாளரும், டிரைவரும் தப்பி ஓடினர். லாரியை பறிமுதல் செய்து இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.

error: Content is protected !!