News November 15, 2024
நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 7, 2026
கிருஷ்ணகிரி: கட்சித் தாவிய முக்கிய புள்ளிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. குடிசதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குரு, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News March 7, 2026
லாரி மோதியதில் பள்ளி மாணவர் பலி

போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சபரி மற்றும் அருண் பிரசாத் பள்ளி மாணவர்கள். இவர்கள் இருவரும் மா-5 இருசக்கர வாகனத்தில் கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சபரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி

கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லப்பா. இவர் கடந்த மார்ச் 5ம் தேதி பைக்கில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


