News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News March 1, 2026

தி.மலை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

தி.மலை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

திமுக கோட்டையா தி.மலை?

image

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. அதேபோல் 2024 MP தேர்தலிலும், தி.மலையில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 2.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றார். இது இந்த மாவட்டத்தின் மீது திமுக கொண்டுள்ள பிடியைக் காட்டுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் TVK, PMK திமுக கோட்டையில் விரிசலை ஏற்படுத்துமா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!