News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17)  காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News March 1, 2026

கள்ளக்குறிச்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebhara<>tgas.com<<>>
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க.SHARE

News March 1, 2026

கள்ளக்குறிச்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

ரிஷிவந்தியம் 200 மடங்கு வளர்ந்துள்ளது – MLA பெருமிதம்!

image

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதிலும், ரிஷிவந்தியம் தொகுதி 200% வளர்ச்சி அடைந்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றவர்கள் மனசாட்சியோடு வாக்களித்தாலே சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!