News August 9, 2024
நாளை ரேஷன் குறைதீர் முகாம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி நிலம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்க முகவரி மற்றும் மொபைலில் மாற்றம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஆகிய ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டு சம்பந்தமான மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 4, 2025
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இல.பத்மநாபனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News November 4, 2025
திமுக துணை பொதுச்செயலாளராக சாமிநாதன் நியமனம்

தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் சாமிநாதன். இவர் தற்போது திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இன்று திமுக துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


