News September 4, 2024
நாளை ரேஷன் கடைகள் இயங்குமா?

அரசு நியாய விலைக் கடைகளில் எஃப்.பி.எஸ் (FPS) செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும் என்றும், நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த ரேஷன் ஊழியர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், நாளை மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News September 16, 2025
20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்

நெல்லை-சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
News September 16, 2025
பிரான்ஸ் மாகாணத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
கையெழுத்திடப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
News September 16, 2025
சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இருக்காது…

2050-ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு குடிநீர் தேவைப்படும். இதற்காக நீர் வளத்துறை (WRD) ஒரு பெரிய திட்டம் செயல்படுத்த உள்ளது. அதன்படி ஏரிகள், குளங்களை சரி செய்யவும், புதிய நீர்த்தேக்கங்கள் கட்டவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் ரூ.14,000 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க உதவும். ஷேர் பண்ணுங்க