News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

Similar News

News September 9, 2025

கிருஷ்ணகிரி: அரசு வேலை – நாளை கடைசி நாள்

image

கிருஷ்ணகிரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், தற்போது நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு நவ.15ம் தேதி நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News September 9, 2025

கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

News September 9, 2025

கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

கிருஷ்ணகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ <>முகாமில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!