News October 28, 2024

நாளை முதல் ரப்பர் வெட்டும் தொழில் நடக்குமா?

image

இன்று காலையில் இருந்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. மதியத்துக்கு மேல் சுள்ளென வெயில் அடித்தது. தொடர் மழையால் ஈரப்பதத்துடன் காணப்பட்ட ரப்பர் மரங்கள் இன்றைய வெயிலில் பால் வெட்டும் நிலையில் காணப்பட்டன. இன்று இரவு, நாளை காலை மழை இல்லாமல் இருந்தால் மட்டுமே பால் வெட்டும் தொழில் நடக்கும் என விவசாயிகள் கூறினர்.

Similar News

News February 6, 2026

நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பரிதாப பலி

image

குமரி, தெங்கம்புதூர் தெற்கு அஞ்சு குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி 52-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு மாடிக்கு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 6, 2026

குமரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

குமரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

குமரி: கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

image

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் பிரிட்ஜோ. இவரை பைக்கில் வந்த கஞ்சா போதை கும்பல் வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளது. மேலும், அந்த கும்பல் பொதுமக்களை அரிவாள் காட்டி மிரட்டியும் உள்ளது. இதுகுறித்த புகாரில் அஸ்வின் என்ற வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் விசாரணையில் இவர் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

error: Content is protected !!