News December 23, 2025
நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. டிச.24, 25 தேதிகளில் சில கடலோர மாவட்டங்களில் 26, 27 தேதிகளில் தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். டிச.26 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும்.
Similar News
News December 23, 2025
அதிமுக + பாமக கூட்டணி… முடிவை அறிவித்தார்

அதிமுக, பாஜக இடையே நடத்த பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயலிடம் EPS பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், முக்கிய விஷயமாக கூட்டணியில் பாமகவிற்கும் அவர் தொகுதி ஒதுக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக(170), பாஜக(23), பாமக(23), மற்றவைக்கு(18) எத்தனை தொகுதிகள் என குறிப்பிட்டு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாம். PMK இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், EPS தொகுதிகளை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் சோகம்

வாரத்தின் முதல் நாளான நேற்று ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று சற்று ஏற்ற, இறக்கத்தை கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்து 85,525 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 4.75 புள்ளிகள் உயர்ந்து 26,177 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. IT, ஏர்டெல், அதானி துறைமுகங்கள், சன் பார்மா, டெக் மஹிந்திரா நிறுவன பங்குகள் 1%-1.5% வரை சரிவை சந்தித்துள்ளன.
News December 23, 2025
EPS பேச்சை பாஜக மதிக்கவில்லை: CM ஸ்டாலின்

MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, EPS பொய்சொல்லி வருகிறார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாள்கள் வேலை தரப்போகிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என வலிக்காமல் EPS கொடுத்த அழுத்தத்தை, பாஜக மதிக்கவில்லை எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.


