News April 27, 2024
நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம்

கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்ததாவது: நாகர்கோவில் பால்பண்ணை முதல் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி நாளை முதல் 30 நாட்கள் நடப்பதால், பார்வதிபுரம் சந்திப்பிலிருந்து பால்பண்ணை, டெரிக், கலெக்டர் ஆபீஸ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையாக பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் வழியாக செல்ல வேண்டும்
Similar News
News August 23, 2025
குமரி மாவட்டத்தின் பழைய பெயர் என்ன தெரியுமா ?

கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய காலத்தில் திருவிதாங்கூர் என்றே அழைக்கப்பட்டது. 1949 ல் திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி மாகாணம் உருவானது. 1956ல் மாநிலங்கள் சீரமைப்பு சட்டத்தின் கீழ் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் பேசும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் என அழைக்கப்பட்டு வருகிறது.
News August 23, 2025
அசாமில் உயிரிழந்த குமரி வீரர் உடல் 42 குண்டுகள் முழங்க தகனம்

தக்கலை அண்ணா நகரை சேர்ந்தவர் வைகுந்த் (28) ராணுவ வீரர். முத்தலக்குறிச்சியில் புதிய வீடு கட்டி நவம்பர் மாதம் திருமணம் செய்து வீட்டில் குடிபுக முடிவு செய்திருந்தார். ஆக19 ம் தேதி அசாம் மணிப்பூரில் தங்கியிருந்த கூடாரம் வழியாக மின்சாரம் வைகுந்தை தாக்கியது. ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார். 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவர் உடல் நேற்று தகனம் செய்ப்பட்டது.
News August 23, 2025
மாணவி பாலியல் வன்முறை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

அருமநல்லூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (56) கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா நேற்று சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.