News December 8, 2024

நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் (டிச.9) வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். ஃபென்சல் புயல் கடந்த 7ஆம் தேதி இரவு கரையைக் கடந்த நிலையில், தொடர்ந்து 2 நாள்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை முதல் வழக்கம்போல் செயல்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News March 10, 2026

விழுப்புரத்தில் பயங்கர விபத்து!

image

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்துப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சிவராஜ்(38). சம்பவத்தன்று இவர், தனது மனைவி சியாமளாதேவி(35), மகன் சாய் சரவணன்(3) ஆகியோருடன் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது பைக்கில் புறப்பட்டார். வளவனூர் அருகே, கோவையைச் சேர்ந்த அபிஷேக்(33) ஓட்டி வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த சிவராஜ், சியாமளா தேவி, சரவணன் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

News March 10, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

விழுப்புரம் ஆட்சியர் இளைஞர்களுக்கு அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவிப்பின்படி, தாட்கோ (TAHDCO) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு மற்றும் கேபின் குழு பணிகளுக்கான 3 மாத இலவச பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாத தகுதியுள்ள நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!