News March 25, 2025

நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்

image

மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய +2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதலே கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், நாளை மறுநாளுடன் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைவதால், அவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட, இப்போதே வெளியூர் பயணத் திட்டம் குறித்து ஆலோசனை செய்யுங்கள்..

Similar News

News March 26, 2025

நிதி நிலுவை: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

image

100 நாள் வேலை திட்டத்தில் ₹4,034 கோடியை வழங்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாக கூறி திமுக சார்பில் வரும் மார்ச் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

News March 26, 2025

இனி டிஜிட்டல் மார்க்கெட்டிங் செலவு குறையுமா?

image

கூகுள், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும், டிஜிட்டல் விளம்பர சேவைகளுக்கான 6% வரியை இந்தியா நீக்கவுள்ளது. இது வரும் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. USA இடையேயான வர்த்தக பதற்றத்தை தணிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வரிச்சுமையால் இந்திய நிறுவனங்களின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செலவுகள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

News March 26, 2025

மதுரை மண்ணில் ஹுசைனி உடல் அடக்கம்

image

புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹுசைனியின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், காஜிமார் தெரு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

error: Content is protected !!