News May 5, 2024

நாளை முதல் இ-பாஸ் பதிவு செய்யலாம்

image

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.  qR code  பயன்படுத்தலாம். இந்த தகவலை  நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2024

உதகையில் பிக் பாஸ் புகழ் அமீர்

image

தனியார் கார் நிறுவன விழாவில் கலந்து கொள்ள உதகை வந்த பிக் பாஸ் புகழ் அமீர் செய்தியாளரிடம் பேசுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல்ஹாசன் ஒருவிதமாகவும், விஜய் சேதுபதி ஒருவிதமாகவும் மக்களை கவர்ந்து வருகின்றனர். கமல்ஹாசனை ஒரு முறையாவது பார்த்து விட முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகன், அவரது நிகழ்ச்சியில் பங்கு பெற்று உங்கள் முன்னால் எல்லாம் நிற்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

News November 20, 2024

நீலகிரி: வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிக்கையில், வீரதீர செயல்கள் புரிந்து வரும் 13 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் வரும் இருபதாம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

News November 20, 2024

நீலகிரி: 346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

image

நீலகிரி மாவட்டத்தில் நடந்த கலை திருவிழாவில் திறமைகளை வெளிப்படுத்திய 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்பிவித்தல், நாட்டுப்புற நடனம், பறை இசைத்தல் உள்ளிட்ட 84 வகை போட்டிகள் உள்ளன. வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்கள் தற்போது மாநிலப் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.