News September 2, 2025
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகை செல்லூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (செப்.03) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் நாகை நாகூர் திருமருகல் கீழ்வேளுர் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாபட்டினம், வாய்மேடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வுகாணலாம் என நாகை மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
நாகை: தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உளுந்து, பருத்தி மற்றும் நெற்பயிர்களுக்கு மாற்றுப் பயிராக தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் . குறிப்பாக மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூச்செடிகளை விவசாயிகள் பெற்று சாகுபடியில் ஈடுபடும் போது நிறைந்த லாபம் அடையலாம் என நாகை மாவட்ட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 9, 2025
நாகை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

நாகை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
நாகை: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

நாகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <