News February 12, 2025

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

image

துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. நாளை (பிப்.13)சேந்தமங்கலம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம்,மாம்பாக்கம், வாழைப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரம், புன்னை, நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம், தக்கோலம் அனந்தபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்

Similar News

News August 16, 2025

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராணிப்பேட்டையில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

ராணிப்பேட்டை இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் <>இந்த இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்!

News August 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு முதல் இன்று(ஆக.16) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

error: Content is protected !!