News September 7, 2025
நாளை மறுநாள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் ஆன சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் வரும்
9.9.2025 (செய்வாய் கிழமை) உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் எனவும், இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
சிவகங்கையில் காவலர் தின வீரவணக்கம்

சிவகங்கை: செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்தார். அதன்படி செப்டம்பர் 6, நேற்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களை போற்றும் விதமாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
News September 7, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News September 7, 2025
சிவகங்கையில் இனி Whatsapp மூலம் தீர்வு

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!