News April 7, 2025
நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.8) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (ஏப்ரல்.7) அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 24, 2026
பொள்ளாச்சி அருகே கோர விபத்து: பெண் பலி

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் கோலார்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலை விபத்து நிகழ்ந்தது. சாலையைக் கடக்க முயன்ற வள்ளியம்மாள் என்ற மூதாட்டி மீது, உடுமலையைச் சேர்ந்த தர்மராஜ் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 24, 2026
கல்விக்கடன் முகாம்: அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் வரும் பிப்.26-ம் தேதி சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார். கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள், ஆதார் கார்டு, 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது அருகில் உள்ள முன்னோடி வங்கியை அனுகவும்.
News February 24, 2026
கோவை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


