News July 29, 2024
நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர், சித்தனாங்கூர், ஆலங்குப்பம், இருவேல்பட்டு, கந்தலவாடி, கருவேப்பிலைபாளையம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசூரில் உள்ள ஏ.எஸ்.கீர்த்தி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
விழுப்புரம்: விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு பதவிகளுக்கு 42வயதிற்கு உட்பட்ட +2 தேர்ச்சி முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் https://villupuram.nic.in பதிவிறக்கம் செய்து 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
News August 27, 2025
விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆகஸ்ட்-29ஆம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறுமாறு விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.
News August 27, 2025
விழுப்புரம்: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த<