News March 2, 2025
நாளை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா பந்தல் கால் முகூர்த்தம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மிகவும் விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழாவை முன்னிட்டு அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நாளை காலை (மார்ச் 3 ) திங்கட் கிழமை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 23, 2025
கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
News August 23, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
தஞ்சாவூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

தஞ்சை மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <