News November 3, 2025
நாளை பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

பொதுத்தேர்வு தேதி எப்போது வெளியிடப்படும் என 10, +2 மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி நாளை வெளியாகிறது. பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 10, +2, கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அவர் அறிவிக்க உள்ளார். என்ன மாணவர்களே, ரெடியா!
Similar News
News November 4, 2025
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். ▶பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
News November 4, 2025
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?


