News December 8, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா?.. அரசு அறிவிப்பு

விஜய் பொதுக்கூட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என SM-ல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி நேரம் தொடங்கிய பின் விஜய் வரவும், பள்ளி முடிவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். அதனால், நாளை விடுமுறை இல்லை. அதேநேரம், பொதுக்கூட்ட பகுதியில் ஒரேயொரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை.
Similar News
News December 15, 2025
உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – பயணிகள் காயம்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சிறுவர்கள் ரயிலில் கல்லைக் கொண்டு எறிந்ததில், கண்ணாடி நொறுங்கி பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தே பாரத் ரயிலில் காயம் அடைந்த பயணிகளிடம், முதுநிலை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.