News November 7, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
Similar News
News November 7, 2025
BREAKING: கேரளாவுக்கு ஆம்னி பஸ்கள் செல்லாது

கேரளாவிற்கு இன்று சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அம்மாநில போலீசார் சிறைபிடித்தனர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட பஸ்களுக்கு ₹70 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை கண்டித்து இன்று இரவு முதல் கேரளாவிற்கு ஆம்னி பஸ்களை இயக்குவதில்லை என்ற முடிவை பஸ் உரிமையாளர் எடுத்துள்ளனர்.
News November 7, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு

<<18228875>>சென்னையை<<>> தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நாளை(நவ.8) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம்.
News November 7, 2025
இந்திய அணிக்கு குட்பை சொல்ல சுனில் சேத்ரி தயார்

இந்திய கால்பந்தின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த சுனில் சேத்ரி, கடந்த ஆண்டே தனது ஓய்வை அறிவித்தார். ஆனால் இந்திய அணிக்கு அவரின் தேவை இருந்ததால், பயிற்சியாளரின் அழைப்பை ஏற்று மீண்டும் அணியில் சேர்ந்தார். 2027 ஆசிய கோப்பைக்கு தகுதி பெற அவர் எடுத்த முயற்சிகள் அணிக்கு கைகொடுக்கவில்லை. இதனால் இந்திய அணிக்கு குட் பை சொல்ல சுனில் சேத்ரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


