News July 30, 2024
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்

புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நாளை (ஜூலை.31) தொடங்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாள் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற உள்ளார். ஆக.1-ஆம் தேதி ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும். பின்னர் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரூ.12,700 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News May 8, 2025
புதுவையில் ஜிப்மர் இயங்காது

மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News May 8, 2025
புதுச்சேரி: உங்க தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா? பாகம்-2

புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
▶️ தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999 ▶️ மணவெளி, செல்வம் – 9843444799 ▶️ வில்லியனூர், இரா. சிவா- 9443117925 ▶️ லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020 ▶️ திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559 ▶️ திருநள்ளாறு, PR.சிவா – 9865536699 ▶️ பாகூர், செந்தில் குமார் – 9600212345 ▶️முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்
News May 7, 2025
கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.