News December 26, 2024

நாளை திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.சி.வீரமணி தலைமையில் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நாளை காலை 9 மணிக்கு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2024

திருப்பத்தூரில் அதிமுக போராட்டம் ஒத்திவைப்பு

image

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகாமையில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்ததையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போராட்டம் குறித்த மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 26, 2024

இரவு ரோந்து போலீசாரின் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (டிச.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். ஷேர் பண்ணுங்க.

News December 26, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் பதிவு 

image

திருப்பத்தூர் காவல்துறை சார்பில்,வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கத்தில் இன்று குழந்தைகளுக்கு ஏற்படும், இன்னல்கள், குழந்தை திருமணத்திலிருந்து பாதுகாத்திட அழைத்திடுங்கள் 1098 என்ற வாசகத்துடன், விழிப்புணர்வு படத்தை பதிவிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.