News December 20, 2025
நாளை திமுக மா.செ.,க்கள் கூட்டம்

தமிழகத்தில் SIR மூலம் சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதால், மா.செ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
அஜிதா விஜய்யை மதிக்கவில்லை: பெண் நிர்வாகி

<<18684988>>அஜிதா<<>> விஜய்யின் காரை வழிமறித்தது, அவருக்கு மதிப்பளிக்காமல் செய்த செயல் என கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு கூறியுள்ளார். இதனால் விஜய் பெண்களை அலட்சியப்படுத்துகிறார் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாக கூறிய அவர், தலைமையிடம் பேசியிருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்றார். மேலும், தலைவரின் காரை மறிப்பது ஒரு நிர்வாகிக்கு அழகல்ல என்றும் சாடியுள்ளார்.
News December 28, 2025
வீடுகள் விற்பனையில் சரிவு கண்ட 7 நகரங்கள்!

நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையிலும், 2025-ம் ஆண்டில் நாட்டின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 14% சரிந்துள்ளது. 2024-ல் 4.5L வீடுகள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் அது 3.9L ஆக குறைந்துள்ளது. இதற்கு அரசியல் பதற்றம், IT-ல் நிலவும் பணிநீக்கம் போன்றவை முக்கியக் காரணங்களாக உள்ளன. எந்தெந்த நகரங்களில் வீடுகள் விற்பனை எவ்வளவு சரிந்துள்ளது என்பதை swipe செய்து பார்க்கலாம்.
News December 28, 2025
இருமுடி கட்டு கோயம்பேட்டுக்கு..

மறைந்த தேமுதிக நிறுவனர் <<18691386>>விஜயகாந்தின் <<>>2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. காலை முதலே தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக கண்ணீர் மல்க நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று விஜயகாந்தின் குருபூஜை என தேமுதிகவினர் அறிவித்துள்ள நிலையில், பலரும் அஞ்சலி செலுத்த தலையில் இருமுடி கட்டுடன் சென்றனர். 48 நாள்கள் விரதமிருந்து தலையில் சுமந்து வந்த இருமுடியை நினைவிடத்தில் வைத்து பக்தியுடன் அஞ்சலி செலுத்தி சென்றனர்.


