News November 13, 2024
நாளை திமுக மத்திய மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (14.11.24) காலை 11 மணி அளவில் மத்திய மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடக்கிறது. மத்திய மாவட்ட அவைத்தலைவர் கே. சுபாஸ் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
Similar News
News August 28, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

ஆக.29- ல் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும், ஆக.30- ல் பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் (06125/06126) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
சேலம்: டிகிரி போதும்..தமிழ்நாடு அரசில் வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக Data Entry Operator, Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 28, 2025
சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆக.28) பெங்களூரு, கொச்சினுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இயக்கப்படவிருந்த அனைத்து ஏர் அலையன்ஸ் விமான சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.